Monday, November 14, 2005

மெர்க்குரிப் பூக்கள்-27 : நவீன அசோகர்!


"அசோகர் சாலையோரங்களில் மரங்களை நட்டார்" என்று நாம் எல்லாரும் படித்திருப்போம். "பின்ன என்ன சாலை நடுவுலயா நட முடியும்?" என்ற கடி ஜோக்குகளையும் கேட்டிருப்போம்.

மஸ்கட்டின் குறும் (Qurum) கடற்கரைக்கு வாரயிறுதியில் (வெள்ளிக் கிழமை) சென்றிருந்தேன். குறும் கடற்கரை நல்ல நீளமான கூட்டமில்லாத சுத்தமான கடற்கரை (பொதுவாகவே ஓமானில் நான் பார்த்தவரை எல்லாக் கடற்கரைகளும் சுத்தமாகவே இருக்கின்றன).

சட்டென்று விலகிப் பறக்கும் ஒற்றைக் கடற்பறவை தெரிகிறதா?


குழந்தைகள் மணலைக் குவித்து வைத்து விளையாடிக்கொண்டிருக்க, காரிலேயே வைத்து விட்ட தண்ணீர் பாட்டிலை எடுத்துவரத் திரும்பியபோது கண்ட காட்சி இது.

ஈச்ச மரங்களை அப்படியே லாரியில் போட்டுக்கொண்டு வந்து, கிரேன் மூலம் தூக்கி..


குழிக்குள் இப்படி இறக்கி நட்டு வைத்துவிடுகிறார்கள். சாலையோர மரங்கள் தயார்!

ஓமானின் சுல்தான் கபூஸ் பின் ஸாயிதை (His Majesty Sultan Qaboos Bin Said) நவீன அசோகர் என்று சொல்லலாமா? :) மஸ்கட் மட்டுமல்ல. மற்ற வளைகுடா நகரங்களிலும் இந்தக் காட்சியைக் காணலாம்.

இதைப் பார்க்கும்போது, பெங்களூர் எம்.ஜி. ரோடும், டிக்கன்ஸன் ரோடும் சந்திக்கும் இடத்திலிருந்து எம்.ஜி.ரோடு இறுதிவரை இருந்த பிரம்மாண்டமான நான்கைந்து மரங்களை, போக்குவரத்து இடையூறு என்று சொல்லி வெட்டித் தள்ளியது நினைவுக்கு வருகிறது (1998-இல்).

5 comments:

tbr.joseph said...

அது சரி சுந்தர்,


இப்படித்தான் சாமியார் மாதிரி நீள அங்கிய போட்டுக்கிட்டு பீச்சில நடப்பாங்களா? பார்க்க வேடிக்கையாத்தான் இருக்கு..

நீங்க சொல்றது சரிதான்.. சென்னையிலும் இப்ப அதே அலங்கோலம்தான்.

Flat கட்டுறேன் பேர்வழின்னு மும்பை இறக்குமதி Buildersஎல்லாரும் இப்ப அதத்தான் செஞ்சிக்கிட்டிருக்காங்க..

இப்படியே போனா நம்ம ஊரும் பாலைவனப் பிரதேசமா மாறுனாலும் ஆச்சரியப்படுறதுக்கில்ல.

"வற்றாயிருப்பு" சுந்தர் said...

//நீள அங்கிய போட்டுக்கிட்டு பீச்சில நடப்பாங்களா?//

யாராச்சும் கவனிச்சுக் கேப்பாங்கன்னு நெனச்சேன். கேட்டுட்டீங்க. :)

பொதுவாகவே வளைகுடா நாடுகளில் மண்ணின் மைந்தர்கள் அவர்களது தேசிய உடையை அணிவது வழக்கம். ஓமானிகளும் அப்படித்தான். தோளிலிருந்து பாதம் வரை மறைக்கும் இந்த உடையை Dish-Dash என்று குறிப்பிடுவோம்.

குட்டிப் பயல்களும் கூட இந்த உடை போட்டுக்கொண்டு வருவது அழகு.

வெப்பத்தைத் தாங்குவதற்காக இந்தக் காற்றோட்டமான ஆடையை அணிகிறார்கள் என்று நினைக்கிறேன். நம்மூர் ராஜஸ்தானில் ஒரு மைல் நீளத் துணியைச் சுற்றிச் சுற்றி தலைப்பாகை கட்டுவார்களே - அது போல!

ஓமான் நவீனமும் வரலாறும் கலந்திருக்கும் அற்புதமான சமூகம். நிறைய எழுத வேண்டியிருக்கிறது. பார்க்கலாம்.

நன்றி.

அன்புடன்
சுந்தர்.

அப்டிப்போடு... said...

நல்ல படங்கள்.

Thangamani said...

இந்த மரம் நடுற டெக்னாலஜிய காப்பி அடிச்சி சென்னையிலயும் நடு ரோட்டுல (சிக்னல்களில்) அப்படியே ஈச்சமரங்களை நட்டுகிட்டு இருந்தாங்க சில வருடங்கள் முன். வேற மரங்களே வராத நாடு மாதிரி. கொடுமை.

கல்வெட்டு (எ) பலூன் மாமா said...

//வேற மரங்களே வராத நாடு மாதிரி. கொடுமை//

:-))))
ஈ அடிச்சான் காப்பின்னு சொல்வாங்க அது இதுதான்