Thursday, February 16, 2006

பாஸ்டனில் பனிப் பொழிவு






பாஸ்டன் காரர்களெல்லாம் என்னத்த கன்னையா மாதிரி "என்னத்த குளிர்காலம்... என்னத்த பனி..." என்று சலித்துக்கொண்ட அசமஞ்சமான குளிர்காலம் இந்த தடவை. திடீர் திடீர் என்று வெயில் அடித்துக்கொண்டேயிருக்க டிசம்பரில் ஒரு நாள் 11 இஞ்ச் அடித்ததோடு சரி. அதைத் தவிர அட்சதை தூவியது போன்று அவ்வப்போது பொழிந்த பனியைத் தவிர வேறு ஒன்றையும் காணோம். இதற்கா இவ்வளவு அலட்டிக்கொண்டாய் என்று சக அலுவலக நண்பனிடம் கேட்கத் தோன்றியது. சி.என்.என்.னில் கூட "Where is winter?" என்று அலுத்துக்கொண்டார்கள்.


சனிக்கிழமையும் சூரியன் பூச்சாண்டி காட்டிக்கொண்டிருக்க Weather Channal-இல் பனிப்புயலைப் பற்றிய அறிவிப்பை வெளியிட்டு ஞாயிற்றுக் கிழமை தரையைத் தொடும் என்று ஜோசியம் சொன்னபோதும் அவ்வளவாக நம்பவில்லை. இங்கும் ஜோஸியங்கள் அவ்வப்போது பொய்த்திருக்கின்றன.


ஆனால் சனியன்று நள்ளிரவு ஆரம்பித்தது - சற்றே வேகமான காற்றுடன் மொத்தமாகச் சேர்த்துவைத்து ஞாயிற்றுக்கிழமை முழுவதும் கொட்டித் தீர்த்தது பனி.

காற்றும் அடித்துக்கொண்டேயிருந்ததால் போக்குவரத்து படு மந்தம். 17" கொட்டியிருக்கிறது. அங்கிட்டு நியூயார்க்கிலும் Mildest winter in the history என்று சொல்லிக்கொண்டிருந்தவர்களின் வாயை அடைத்து 26" வரை பொழிந்து தள்ள மக்கள் முடங்குவதற்கு பதில் உற்சாகத்துடன் பனிப்பலகையையும் சறுக்குப் பட்டையையும் மாட்டிக்கொண்டு தெருவில் இறங்கி வழுக்கிக்கொண்டு செல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.

காற்றுக்கு பயந்து மாலை வரை பொறுத்திருந்த குழந்தைகள் இருட்டத் தொடங்கியபோது பொறுமையிழந்து வெளியே போய் பனியில் உருண்டு புரண்டுவிட்டு வந்தார்கள். மறுபடியும் திங்களிலிருந்து தட்பவெப்பம் 40 டிகிரி செல்ஷியஸ்க்கு மேலே ஓடிக்கொண்டு பளீரென்று வெயிலடிக்க, சேர்ந்த பனி உருகத் தொடங்கிவிட்டது.

இயற்கை நன்றாகவே கண்ணாமூச்சியாடுகிறது.

***

5 comments:

Boston Bala said...

Its back to cold days over the weekend huh...

கோவை ரவீ said...

Very Nice Photos. Enga college centrla parthen A/C la photos Chillnnu irunthathu. -- Covai Ravee

நாமக்கல் சிபி said...

ஆஹா...
அப்ப நான் பார்த்தது ஒண்ணுமே இல்லை...

சரி... எப்படியும் வராமலா போயிடும் ;)

அரை பிளேடு said...

நல்ல போட்டோஸ்

நம்ம பக்கம் (கனக்டிகட்) இன்னும் பனி எட்டிப் பாக்கலீங்க.

:)))

சேதுக்கரசி said...

//சரி... எப்படியும் வராமலா போயிடும் ;)//

இதை எதுக்கும் ஒரு நடை பாருங்க பாலாஜி :)
http://gprime.net/video.php/icescraping