Thursday, August 09, 2007

புகைப்படப் போட்டிக்கு - நெம்ப கஸ்டமப்பா!

'ரெண்டே ரெண்டுதான் சமர்ப்பிக்கலாம்'னு சொல்லிருக்காங்களே - அதாங்க நெசமான சவால். ரெண்டு வாரமா 'எந்த ரெண்டு?'ன்னு யோசிச்சு மண்டை காய்ஞ்சிருச்சு! :-((

கடைசில சீட்டுப்போட்டுக் குலுக்கித்தான் அந்த 'ரெண்டை'த் தேர்ந்தெடுத்திருக்கேன். என்னமோ போங்க!
வராத சீட்டுகள்ல இருந்த படங்கள் இதெல்லாம். ஒரு வேளை 'அது' இதுக்குள்ள ஒண்ணா இருக்குமோ? அந்த போர்ட்ரெய்ட்டாண்டவர்தான் காப்பாத்தணும்!

29 comments:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

குழந்தைகள் படமெல்லா? எல்லாம் நல்லாவே இருக்கிறது.

வற்றாயிருப்பு சுந்தர் said...

நன்றி யோகன்.

விட்டுப்போன இன்னும் சில படங்களைச் சேர்த்திருக்கிறேன்.

இராம் said...

சூப்பருங்க......


குழந்தைக்கு சுத்தி போடுங்க...... அழகா போஸ் கொடுக்கிறாங்க :)

வற்றாயிருப்பு சுந்தர் said...

நன்றி இராம்.

வீட்ல சொல்லிச் சுத்திப் போடச் சொல்றேன். (அதான் திருஷ்டிக்கு நானிருக்கேன்ல? :-))

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

தலைவாரிப் பூச்சூடி!!
நல்ல கலைநயமான படம் ; பின் வெளிச்சம் கூடியதால் சற்றுக் கறுப்பாகிவிட்டது.
ஆனாலும் யாவும் அழகே!

CVR said...

gr8 photos!!
i can imagine,how tuff it would hae been for you!!

வற்றாயிருப்பு சுந்தர் said...

கேக்காதீங்க CVR. அழுதுபோடுவேன். ஆமா.

வாசகன் said...

செல்லத்தின் படங்கள் அத்தனையும் அழகு!

வெற்றி said...

சுந்தர்,
அருமையான படங்கள். பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள். போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

வற்றாயிருப்பு சுந்தர் said...

வாசகன்,

நன்றி.

வெற்றி - வெற்றியோ தோல்வியோ - பங்கெடுத்துக் கொள்வது முக்கியம். அதில் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றிகள்.

காட்டாறு said...

கலக்கல் பாப்பா. குலுக்கின சீட்டு லக்கி சீட்டா இருக்க வாழ்த்துக்கள்!

வற்றாயிருப்பு சுந்தர் said...

நன்றி காட்டாறு.

போட்டியாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

OSAI Chella said...

ஹை! போட்டோ கிராபரா ... மாடெலா.. யாரு சூப்பருன்னு ஒரு போட்டி வச்சுடலாம்!என் ஓட்டு மாடெலுக்குத்தான்!!

வற்றாயிருப்பு சுந்தர் said...

செல்லா

//என் ஓட்டு மாடெலுக்குத்தான்!!
//

அது சரி. போட்டோகிராபரோட ஓட்டே மாடலுக்குத்தான்! :-))

வெள்ளித்திரைல வர்றவங்களுக்குத்தானே ரசிகர் கூட்டம்! - பின்னாடி உழைக்கறவங்களோட பேரு டைட்டிலோட சரி. நமக்கு வலைப்பதிவோட சரி :-))

Athi said...

Wow... Sundar... Pappa romba super'aa pose kudukkuthu. Mothalla poi suthi podunga!! Fotos'laam attakaasamaa irukku!!

வற்றாயிருப்பு சுந்தர் said...

சுத்திப் போடறோம். நன்றி ஆதி.

இளவஞ்சி said...

சுந்தர்,

நீங்க சொன்னதேதான்.

இந்த மாசம் போட்டி நெம்ப கஸ்டந்தேன்! :)

லொடுக்கு said...

ஜெயிச்சதுக்கு வாழ்த்துக்கள்! :)

வற்றாயிருப்பு சுந்தர் said...

ஆமா இளவஞ்சி. நடுவர்கள் பாடு திண்டாட்டம்னு போட்டியாளர்களோட படங்களைப் பாத்தாலே தெரியுது. பங்கெடுக்கறவரைக்குந்தான் நமக்கு டென்ஷன். அப்றம் நடுவர்களுக்கு டென்ஷன்! :-))

நன்றி.

வற்றாயிருப்பு சுந்தர் said...

லொடுக்கு

நீங்க எந்த ஊர்னு சொன்னீங்கன்னா எந்த ஊர்க் குசும்புன்னு புரிஞ்சுக்கறதுக்குச் சவுரியமா இருக்கும்!

Deepa said...

உங்க படங்களுக்கு "சிறப்பு பார்வை " குடுத்திருக்காங்க ... வழ்துக்கள்

வற்றாயிருப்பு சுந்தர் said...

நன்றி தீபா. மகிழ்ச்சியாக இருக்கிறது.

Sathia said...

வாழ்த்துக்கள்.
உங்கள lighting sense சூப்பர்.

வற்றாயிருப்பு சுந்தர் said...

நன்றி சத்யா.

உங்களுக்கும் வாழ்த்துகள். இனிமே குழந்தையை அழ வைக்காதீங்க :-))

யாத்திரீகன் said...

வாழ்த்துக்கள்.. வாழ்த்துக்கள்... வாழ்த்துக்கள்....


சுந்தர்: பாப்பா கொள்ளை அழகு, அதுவும் கொஞ்சம் வெயிலில் இருக்கும் இந்த படம் தேவதையாய் காமிக்கின்றது...

பாரதிய நவீன இளவரசன் said...

படம் புடிச்ச ஒங்களுக்கும், போஸ் கொடுத்தப் பாப்பாவுக்கும் திருஷ்டி சுத்திப்போடணும்.

வாழ்த்துக்கள் அய்யா வாழ்த்துக்கள்!

kovi said...

படங்கள் மிக அருமை. ஆதன் ரகசியம் என்ன ?. Digital SLR camera in Manual Mode அ.

வற்றாயிருப்பு சுந்தர் said...

நன்றி கோவி.

Digital SLR என்னிடம் இல்லை. இருப்பது ஒரு சாதாரண 5MP Kodak Camera மட்டுமே.

அபி அப்பா said...

அடப்பாவி கண்ணு பட போவுதய்யா! நீ பரிசு வாங்க நம்ம வீடு கு!ட்டீயா கிடைச்சா! பதிவ தூக்குய்யா! நான் என் தங்கமண்ணி கிட்ட வீட்டுல ஏற்கனவே வாங்கி கட்டிகிட்டேன்! நீ இன்னுமா வாங்கி கட்டிக்கலை!