Tuesday, September 25, 2007

இருள் சூழும் தருணங்கள்

விமானத்தின் சன்னலினூடே கண்ட அஸ்தமனம்


நீள்வட்ட வட்டம்இடம்: அட்லாண்ட்டா விமான நிலையம்

அன்பு

குமிழி

பனிப் புன்னகை

வான்மகளின் நகம்இடம்: பிரபஞ்ச வெளியில் பூமிப் பந்திற்கு மேலே

Monday, September 24, 2007

போக்குவரத்துக் காவலர்


அந்தப் பக்கம் போகக் கூடாது. மந்தி(ரி) வர்றாரு. இந்தப் பக்கமாத்தான் போகணும் மேடம்!

மழைக்குள் குடைஇடம்: சார்லஸ் நதி, பாஸ்டன்

பறந்தாலும் விட மாட்டேன்


இடம் : நயாகரா

மரத்தைச் சுற்றி

தமிழ்ச் சூழலில் மரத்தைச் சுற்றியாடுவது தவிர்க்க முடியாததொரு விஷயமல்லவா? :-)

 
Posted by Picasa

Wednesday, September 19, 2007

இஸ்லண்ட் எஸ்டேட் in பாஸ்டன்

படங்கள் பாஸ்டன் துறைமுகம், எல்லிஸ் தீவு, ஜார்ஜ் தீவு ஆகிய இடங்களில் எடுத்தது. அந்த இஸ்லண்ட் எஸ்டேட் மட்டும் எவ்வளவு தேடியும் கண்டுபிடிக்கவே முடியவில்லை! :-)

Tuesday, September 18, 2007

Benz Logoஇடம் : பாஸ்டன் துறைமுகம்
எடுத்தது: ஜார்ஜ் தீவிலிருந்து

அது பாட்டுக்குச் சுத்திக்கிட்டே இருந்தது - நாலாவது முறை எடுத்தப்போ நினைச்ச கோணத்துல வந்தது! சுத்தி ஒரு வட்டம் போட்டா பென்ஸ் எம்ப்ளம் மாதிரி இருக்காது?

Monday, September 17, 2007

பாஸ்டனில் விநாயகர் சதுர்த்தி


பிளாஸ்டிக் பிள்ளையாரை பாதியாக 'வகுந்து' அச்சாக உபயோகித்து களிமண் நிரப்பிப் பிள்ளையார் சிலைகள் செய்ததுண்டு. சிலைகளின் பின்புறம் தட்டையாக இருக்கும். காய்வதற்குள் மழை வராமலிருக்க வேண்டும் என்று பிள்ளையாரை வேண்டிக்கொள்வோம்.

விநாயகர் சதுர்த்தியன்று பூஜை, புனஸ்காரம் (என்றால் என்ன?) முடிந்ததும் எப்போது கொழுக்கட்டைப் பாத்திரத்தை நகர்த்துவார்கள் என்று காத்துக்கொண்டிருப்போம். இனிப்புக் கொழுக்கட்டை, காரக் கொழுக்கட்டையோடு, அவல், பொரி, வெல்லம் என்று - இதற்காகவே முந்தைய இரவில் சாப்பிட்டிருக்க மாட்டோம் - போட்டுத் தாக்கிவிட்டு திண்ணையில் பகலில் கண்ணயர்வது சொர்க்கம்.சிலையைக் கரைப்பதற்காக ஊர்க்கோடியில் இருந்த குளத்திற்குப் போய் மெதுவாக விதவிதமாக அவரை மூழ்கடித்து விட்டுத் - களிமண் லேசில் கரையாது - திரும்பிவிடுவோம். சிலர் படித்துறையிலிருந்து நடுக்குளத்திற்குத் தூக்கி எறிவார்கள். சிலர் வீட்டுக் கொல்லைப்புறத்தில் இருக்கும் கிணறுகளில் இறக்கி விடுவார்கள். அவல் பொரி நீண்ட நாள்களுக்குத் தவணை முறையில் கிடைக்கும்!


அப்போது தெருவில் ஊர்வலம் எல்லாம் கிடையாது. பிள்ளையார் அவரவர் வீட்டில் இருந்து பின்பு கரைந்து போவார். கோவிலிலிருந்து மட்டும் பிள்ளையார் சதுர்த்தியன்று அவர் வீதியுலா வருவார். எட்டுத் திசைகளிலும் நிறுத்தி பூஜை செய்து மறுபடியும் கோவிலுக்குள் சென்று சமர்த்தாக அமர்ந்து கொள்வார். வட இந்திய ஆட்ட பாட்டமெல்லாம் சமீப வருடங்களில்தான் தமிழகத்தில் நுழைந்து பிள்ளையார் அரசியல்வாதிக்கு அடுத்தபடியாகப் பிரபலமாகி இப்போது காவல் துறை பாதுகாப்போடு செல்ல வேண்டியிருக்கிறது. இங்கு இங்கெல்லாம் செல்லலாம் - இங்கெல்லாம் செல்லக்கூடாது என்று இறைவனுக்கு மனிதன் கட்டளைகள் போடுகிறான் என்பது விநோதம்! சரி அரசியல் தெரியாத விஷயம் - ஆகையினால் நிற்க.


அப்புறம் இதிலெல்லாம் நாட்டமின்றிப் போய் நீண்ட காலமாகி விட்டது.

வழக்கம்போல பரதநாட்டிய வகுப்புக்காக மகளை அழைத்துச் சென்றிருந்தபோது இங்கு ஆஷ்லாண்ட் லக்ஷ்மி கோவிலில் விநாயகர் சதுர்த்தியன்று சாமி ஊர்வலம் போகும்போது ஒவ்வொரு திசையில் நிறுத்தும்போதும் ஆடக் குழந்தைகளை அனுப்பும்படி தொலைபேசி வர, நடன ஆசிரியை எங்களிடம் கேட்டுக்கொண்டார். சனியன்று எப்படியும் கோவிலுக்குப் போக வேண்டும் என்று ஏற்கனவே 'வீட்டில்' சொல்லியிருந்தபடியால். குழந்தையை அழைத்துக்கொண்டு பனிரெண்டு மணிக்குப் போக, ஏகக் கூட்டம். எல்லாருக்கும் இறைவன் நினைவு வந்து கோவிலில் கூட்டம் அம்மியது. பூஜை மந்திரங்களை விட மக்களின் குசலம் விசாரிப்புச் சத்தம் அதிக இரைச்சலாக இருந்தது.


பிள்ளையார் சிலைகள் $15 க்கு விற்றுக்கொண்டிருந்தார்கள். எனக்கு 15 டாலர்களை நீரில் விட மனம் வரவில்லை. எங்கள் வீட்டில் நிறைய பிள்ளையார்கள் இருக்கிறார்கள். அவர்கள் இருக்கட்டும். கீழே காண்ட்டீனிலும் ஏக இரைச்சல். முதலில் போண்டாவை $1 என்று தனியாக விலைப்பட்டியலில் போட்டு எல்லாரும் அதற்கு மட்டும் முண்டியடித்ததால் இட்லியோடு அதைச் சேர்த்து $5-க்கு விற்றார்கள். வெண் பலகையில் எழுதி அவ்வப்போது combinations-களை விற்பனைக்குத் தகுந்தாற்போல் மாற்றி எழுதிக் கொண்டிருந்தான் ஒரு சிறுவன். பசி என்றால் பத்து டாலரும் பறக்குமே!கோவிலின் பிரதான வாயில் திறக்கப்பட்டிருக்க வெளியே சப்பரம் தயாராக இருந்தது. அன்று குளிர் அதிகம். குழந்தைகளால் வெறுங்கால்களோடு நிற்க முடியாததால் உள்ளேயிருந்து பெரிய Rug ஒன்றைக் கொண்டு வந்து விரித்துப் போட்டார்கள். எட்டுத் திசைகளில் சப்பரத்தை நிறுத்தும்போதும் ஆடுவதற்காக பல குழந்தைகள் வந்திருந்தார்கள்.பிள்ளையார் பல்லக்கை வெளியே கொண்டுவந்து பிள்ளையாரை சப்பரத்திற்குள் வைத்து பூஜைகள் துவங்க, பூசாரி 'ஸ்பான்ஸர்ஸ் எலலாரும் வாங்க வாங்க' என்று அழைத்து பிரசாதம் இன்ன பிற வழங்கி விவேகமாக நடந்துகொண்டார். 'ரெடி ஸ்டார்ட்' என்று யாரோ குரல் கொடுக்க, கேஸட்டை வைத்திருந்தவர் அதை யாரிடமோ கொடுத்துவிட்டுக் கொஞ்ச நேரம் தேடினார். கடைசியில் சப்பரத்தின் ஓரத்திலேயே இருந்தது. அமுக்கி ஓடவிட குழந்தைகள் நடனமாடினார்கள் - மூன்று நிமிடங்கள் வரையிலான பிள்ளையார் பாட்டுக்கு.சப்பரம் நகர்ந்து அடுத்த திசை நிறுத்தத்திற்குச் செல்ல, Rug-ஐயும் நகர்த்தி நகர்த்திப் போட்டது பாராட்டத் தக்கது. சப்பரத்தில் பிள்ளையாரும், குழந்தைகளும், Rug-ம் முழுச்சுற்று சுற்றி முடித்தார்கள். இன்னொரு நடனப் பள்ளியிலிருந்து ஒரு அமெரிக்கப் பெண்மணியும் அவரது குழந்தையும் அட்டகாசமாக பரதநாட்டிய உடையில் வந்து அழகாக ஆடினார்கள். நம் பெண்களுக்கேயுரித்தான நளினம் அவர்களிடம் லேசாகக் குறைந்திருந்தது போலத் தோன்றினாலும் - நளினமே இல்லாத நம்மூர்ப் பெண்களையும் பார்த்திருக்கிறேன் - நன்றாகவே ஆடினார்கள். குழந்தைகள் அனைவரும் நன்றாக ஆடினார்கள்.
பாட்டு, கோவில், சாமி, மதம் எல்லாம் அந்த மூன்று நிமிடங்களுக்கு மனதிலிருந்து காணாமற்போய் சலங்கைகள் குலுங்கும் அந்தக் கால்களும், நடனமும் மட்டுமே இன்னும் மனதில் மிச்சமிருக்கிறது.காலிலே கலை வண்ணத்தை இப்படிப் பார்க்கச் சொல்லியிருப்பார்களோ?


***

Teacher and the Students

 
Posted by Picasa

Thursday, September 13, 2007

பனிச் சிற்பி