Thursday, November 15, 2007

'சாலை' - நவம்பர் மாத PiT புகைப்படப் போட்டிக்கு

ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்பவும் தாமதமாகி விட்டது. நேரமின்மை, அலைச்சல் என்று நாட்கள் போனதையே கவனி்க்கவில்லை. பங்கேற்காமலிருக்கக்கூடாது என்று அவசர கதியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இவை. இரண்டைத் தவிர மற்றவை வண்டியோட்டிக்கொண்டு எடுக்கப்பட்டவை - ஆகையால் நினைத்த அளவிற்கு வரவில்லை. இருந்தாலும் பங்கெடுத்துக்கொண்டோம் என்ற மகிழ்ச்சி போதுமானது!

போட்டிக்கான படம் 1. வீட்டிலிருந்து காலையில் கிளம்பியதும் எடுத்தது.



போட்டிக்கான படம் 2. காலையில் அலுவலகத்திற்குச் செல்லும் வழியில் எடுத்தது



3. இன்று மாலை எடுத்த மழைச் சாலை



4. நேற்று அதிசயமாக சூரியன் காலையில் தலைகாட்டியிருந்தான். அலுவலகத்திற்குப் போகும் வழியில் காருக்குள்ளிருந்து எடுத்தது.



5. இந்தப் படம் மூன்றாண்டுகளுக்கு முன்பு எடுத்தது. துபாய் நிறுவனமொன்றின் அலுவலகத்தின் கண்ணாடிச் சுவர் வழியாக என்னுடைய பழைய மெர்க்குரி 2MP காமிரா மூலம் எடுத்தது.

12 comments:

வடுவூர் குமார் said...

wah! the last one simply superb.

விழியன் said...

வாழ்த்துக்கள்..

Athi said...

முதல் படம் நல்லா இருக்கு... But, moving'ல எடுத்ததோ??

வற்றாயிருப்பு சுந்தர் said...

விழியன், வடுவூர்குமார்

நன்றி.

ஆதி - ஆமாங்க. எல்லாம் வண்டியோட்டும்போது எடுத்ததுதான்.

சூர்யா said...

2-வது படம் அருமை. ஓபிஸ் போற வழியா? கொடுத்துவச்சவரய்யா நீங்கள்!!

வற்றாயிருப்பு சுந்தர் said...

//2-வது படம் அருமை. ஓபிஸ் போற வழியா? //

ஆமாங்க சூர்யா. நன்றி.

அப்றம் வேல் எப்படி போயிட்டிருக்கு? அசின் நலமா? :-)

நாகை சிவா said...

நல்லா இருக்கு சுந்தர் :)

வாழ்த்துக்கள்

நட்டு said...

கூட இரண்டு பேர் வந்திருந்தா அரை சதம் எட்டியிருக்கும்.நீங்கதான் கடைசி விக்கட் போல...(கொத்தனார் பிளிஸ்!பிளிஸ்ன்னு கெஞ்சியும் நாட்டாமை ஆட்டத்துக்கு சேத்திக்கல)

சரி படத்துக்கு வருவோம்.எனக்கென்னவோ அவசர அவசரமா எடுத்த படங்கள் போல தோணல.ஒருவேளை அவசரமா எடுத்திருந்தா அவசரமில்லாமல் எடுக்கும் படங்கள் எப்படி இருக்கும்?(அதுதான் முந்தைய போட்டிகளே சொல்லுதே!)

வற்றாயிருப்பு சுந்தர் said...

நட்டு

//அவசர அவசரமா எடுத்த படங்கள் போல தோணல.//

கடைசிப்படம் மட்டும் - குறிப்புல சொன்ன மாதிரி - என்னிக்கோ நின்னு நிதானமா எடுத்தது. மத்ததெல்லாம் காலையிலும் மாலையிலும் அலுவலகத்திற்குப் போம்போதும் வரும்போதும் வண்டிக்குள்ளருந்து எடுத்ததுங்க.

என்னென்னவோ செய்யணும்னு திட்டம்போட்டு ஒண்ணும் செய்யமுடியாம போச்சுங்கறது சோகம். :-( பங்கேற்காமப் போகக்கூடாதுங்கற ஒரே காரணத்திற்கு அவசரமா எடுத்துப் போட்ட படங்கள் இவை.

நன்றி.

OSAI Chella said...

Sundar naale lighting eppadi panniyirupparnu paakka inge vanthen! kalakkal compositions intha thadavai! athilum antha Dubai image great composition! Your entries are also great! thanks for participating!

வற்றாயிருப்பு சுந்தர் said...

Dear Osai Chella

//thanks for participating!//

It's my pleasure. I was afraid that I would miss the deadline - Participation is the key - glad I made it.

Thank you for kind words.

Anonymous said...

Live India Vs Australia 3rd One Day.


http://tv.haplog.com/sop.php?src=sop://broker.sopcast.com:3912/33407



Enjoy!!!தமிழ்.ஹப்லாக்.காம் Telugu.haplog.com Hindi.haplog.com Malayalam.haplog.com kannada.haplog.com music.haplog.com radio.haplog.com tv.haplog.com
(Tamil.Haplog.com)