குழந்தைகளுக்கு ஆர்வம் எங்கிருந்துதான் இவ்வளவு கொப்பளித்து வருகிறதோ என்று ஆச்சரியமாக இருக்கும். பரபரவென்று 24 மணிநேரமும் இருப்பார்கள். பொம்மைகளெல்லாம் போரடித்துவிட்டால் அவ்வளவுதான். பக்கத்தில் வந்து நின்றுகொண்டு நாம் செய்வதை 'நான் செய்யறேன்' என்று அடம்பிடிக்க ஆரம்பித்துவிடுவார்கள். 'நானு.... நானு...நானு' என்று அருகில் வந்து நின்றுகொண்டு துள்ளிக்குதிக்க ஆரம்பித்தார்களென்றால் நம்மால் நிலையாய் இருக்கமுடியாது. அவர்களது பரபரப்பு நம்மையும் தொற்றிக்கொண்டு விடும். "தள்ளிப்போ" என்று எகிறுவதெல்லாம் விரயம். பேசாமல் செய்துகொண்டிருக்கும் வேலையை அப்படியே நிறுத்தி அவர்களிடம் ஒப்படைத்துவிடுவது உத்தமம்.
அப்படிச் செய்த உத்தமமான காரியம் கீழே. துர்காவின் கைகளால் அரைபட்டுக் கொண்டிருப்பது பாக்கு அல்ல - மிளகு!
7 comments:
so.. sweeeeeeeet !!!
vaazhthukkal
endrendrum anbudan
seemachu
ஆமாம் சுந்தர்! எங்க வீட்டுலயும் இதே கதை தான். சட்டி பானை எல்லாம். ஹால்ல தான் சமையல் :-). படம் அழகு. உங்க பொண்ணா?
நன்றி சீமாச்சு!
சிவா..
//உங்க பொண்ணா? //
ஆமா. ரெண்டாவது வால். அதாவது ரெட்டை வால்! :))
சுந்தர், துர்காவின் படமும் பதிவும் அருமை!
Thanks Selvaraj.
முதல்ல பார்த்தேன்..
அப்புறம் பின்னூட்டம் இட மறந்துட்டன்..
அருமையான புகைப்படம்....
நானு நானு அருமையாக மேட்டர்யா....
நானும் இப்போது அனுபவிக்கிறேன்..
என் புரபைலை பார்க்கவும்....
முத்து - நன்றி.
//என் புரபைலை பார்க்கவும்....
//
பாத்தேன். குட்டிப்பொண்ணு அமர்க்களமா இருக்கா... திருஷ்டி சுத்திப் போடுங்க! :)
அது சரி! என்னோட ப்ரொபைலைக் காப்பியடிக்கறதுன்னு எதாச்சும் வேண்டுதலா? என் ப்ரொபைலையும் கொஞ்சம் பாருங்களேன்! ;)
Post a Comment