Friday, November 04, 2005

மெர்க்குரிப் பூக்கள் - 18 : The Angel is in the detail!

'ஒரு குழந்தையைப் புகைப்படம் எடுத்தால் அதன் உயரத்திற்கு நின்று எடு' அப்போதுதான் படம் அழகாக இருக்கும் என்று எங்கோ படித்திருக்கிறேன். நாம் நின்று கொண்டே நம்மைவிட மிகவும் உயரம் குறைந்த குழந்தையைப் படம் எடுத்தால் மிகவும் சுமாராக இருக்கும். குழந்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கும்.

சில விஷயங்களை அணுகிப் பார்க்காமலேயே அவற்றின் அழகை அறியாதவர்களாக இருக்கிறோம் என்று அடிக்கடி நினைத்துக்கொள்வேன். படுத்துக்கொண்டிருக்கும்போது சுவரில் சீராகச் செல்லும் எறும்பு வரிசையைச் சற்று பொறுமையாக கவனித்தால் நிறைய ஆச்சரியப் படுவோம். நம்மீது அமர்ந்து ஊசி போட்டு இரத்தத்தை உறிஞ்சும் கொசுவை அடித்து நசுக்கித் தேய்ப்பதற்கு பதிலாக - மருத்துவர் ஊசி போடுகையில் மெளனமாக அவர் கையையும் நம்முள்ளே பொதிந்திருக்கும் ஊசியையும் பார்ப்போமே - அதைச் சற்று உற்று நோக்கிப் பாருங்கள்! லேசாக ஊதுங்கள்!

மெர்க்குரி சாதாரணமான View & Shoot digital camera என்று குறிப்பிட்டிருக்கிறேன். அதில் லென்ஸுக்குப் பக்கத்தில் ஒரு சிறிய தாமரை படம் போட்டு விசை ஒன்று இருக்கிறது. அவ்விசையைப் போட்டுவிட்டு ஒரு அடி தூரத்தில் வைத்து எந்தப் பொருளையும் படம் எடுக்கலாம் என்று User Manual-இல் போட்டிருந்தார்கள். சரி என்ன ஆகிறது பார்க்கலாம் என்று எடுத்துப் பார்த்தால் ஆச்சரியம்! இதை சாதாரண மெர்க்குரியில் எடுத்தது என்று சொன்னால் நண்பர்கள் நம்ப மறுக்கிறார்கள்!


உண்மையிலேயே இவை மெர்க்குரிப் பூக்கள் தான்! இல்லையா? :)


இப்படத்தை நான் எடுத்தது பூவுக்காக அல்ல. பூவின் காம்பிலிருக்கு முட்களுக்காக!

படங்களை எடுத்தது சிரியாவிலிருக்கும் எங்கள் நிறுவன வாடிக்கையாள நிறுவனத்தின் பிரதான வாயிலிலிருக்கும் சிறு தோட்டத்தில்!

4 comments:

rv said...

முதல் இது படங்களும் மிகவும் நன்றாக இருக்கின்றன.

ஆனால், மூணாவதில் limitations தெரிகின்றன. :)

Thangamani said...

சுந்தர், இந்தத் தொடரை படித்துவருகிறேன். முதலில் தொடர்கதையென நினைத்து போய்விட்டேன். மெர்க்குரியில் மையம் கொண்டதுபோல இருந்தாலும், எளிய நடையில் நன்றாகப் போகிறது. நன்றி!

Anonymous said...

படங்கள் அருமை சுந்தர்

Sundar Padmanaban said...

பின்னூட்டங்களுக்கு நன்றி நண்பர்களே.

தங்கமணி - அதான் நானும் நினைச்சேன். தொடர்கதைன்னு படிக்காம ஓடிருவாங்கன்னு. நல்ல வேளை நீங்க துணிஞ்சி வந்து படிச்சிருக்கீங்க. :)

நன்றிகள்.

Add to Technorati Favorites