Tuesday, November 08, 2005

மெர்க்குரிப் பூக்கள்-20 : பனிப்புயலும் தண்ணீர் சக்கரமும்

ராட்சத ராட்டினம் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது சிரியாவின் ஹமாவில் இருக்கும் 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தப் பழங்கால நீரிறைக்கும் சக்கரம் - நோரியச் (Norias). ஆற்றிலிருந்து நீரிறைப்பதற்காக அமைக்கப்பட்டது. இப்போது அந்தப் பணியை மின்னியந்திரங்கள் செய்துவிடுவதால் சும்மா சுற்றிக்கொண்டிருக்கிறது - ஒரு புராதானச் சின்னமாகவும், வரலாற்றின் அடையாளமாகவும்.


ஹமா (Hama) டமாஸ்கஸ்ஸிலிருந்து அலெப்போ செல்லும் வழியில் ஹோம்ஸ் (Homs) நகரைத் தாண்டியதும் இருக்கிறது.

அந்த முறை சிரியா சென்றிருந்தபோது டமாஸ்கஸ்ஸிலிருந்து சாலை வழியாக அலெப்போவிற்குப் பயணிக்கையில் அடித்த பனிப்புயலில் மாட்டிக்கொண்டோம். வண்டியை 10-20 கி.மீ. வேகத்திற்கு மேல் ஓட்ட முடியவில்லை. எறும்புவரிசை போல நெடுக வாகன வரிசை. எங்கும் நிறுத்த முடியாது. இன்ஜின் அணைந்தால் திரும்பக் கிளப்ப முடியாது என்று ஓட்டுனர் சொன்னார். சாதாரணமாக மூன்றரை மணிநேரம் எடுக்கும் அந்தப் பயணம் பனிப்பொழிவின் காரணமாக எட்டு மணி நேரத்திற்கு மேலாகியது.

வண்டியிலிருந்தபடியே எடுத்த புகைப்படங்கள் இவை:


சிரியாவின் தற்போதைய ஜனாதிபதி பாஷர் அல்-அஸ்ஸாத் (Bashar al-Assad)-ம் அவரது மறைந்த தந்தையும் முன்னாள் ஜனாதிபதியுமான ஹபீஸ் அல்-அஸ்ஸாதும் (Hafiz al-Assad).

அந்தப் பனிப்புயலிலும் பேருந்துக்காகக் காத்திருக்கும் பெண்மணி. மேலும் விவரங்களுடன் பயணக்கட்டுரை அகரமுதல-வில்.

4 comments:

Anonymous said...

நடுப்படம் நம்ம கலைஞரும்., எம்.ஜி.யாரும் மாதிரி இருக்கு., மூன்றாம் படம் மனம் நெகிழ வைத்தது. நன்றி.

சிவா said...

சுந்தர்! படங்கள் எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு. ஒரு வாரத்திலேயே எல்லாத்தையும் எழுதி தள்ளிட்டீங்க. என்னோட அண்ணன் கூட மஸ்கட்ல தான் இருக்கான்.அவனிடம் சொல்லியிருக்கிறேன் உங்கள் பதிவை பற்றி.

Thangamani said...

3வது படம் சொல்லியது நிறைய.

Sundar Padmanaban said...

பின்னூடங்களுக்கு நன்றி நண்பர்களே.

//ஒரு வாரத்திலேயே எல்லாத்தையும் எழுதி தள்ளிட்டீங்க//

சிவா. எல்லாத்தையுமில்லை. இப்பத்தான் ஆரம்பிச்சிருக்கேன். :) இன்னும் நிறைய இருக்கிறது. முடிந்த அளவு பதிவு செய்கிறேன். அது சரி. உங்க அண்ணன் மஸ்கட்டில் எங்கே இருக்கிறார்? எத்தனை காலமாக இருக்கிறார்?

தங்கமணி - சில காட்சிகள் எந்த முன்/பின்னறிவுப்புகளுமின்றி, விளக்கங்களின்றி மனதைக் கனக்கச் செய்யும். இயக்கங்கள் ஸ்தம்பித்த அந்தப் பனிப்புயல் பொழுதிலும் பேருந்துக்காக ஓரடிக்கு மேல் படிந்திருக்கும் பனியில் காத்துக்கொண்டிருந்த அந்தப் பெண்மணி நிற்கும் காட்சி மனதிலும் நீங்காது பதிந்திருக்கிறது. நீங்கள் சொல்லியது போலவே இந்தப் படம் நிறையச் சொல்கிறது - பேசாமலேயே!. நன்றி.

Add to Technorati Favorites