Tuesday, November 15, 2005

கருத்துப் படம்!


"நம்மகிட்ட இருந்து பொறந்தோம்னு சொல்லிக்கிட்டு இந்த மனுசப் பயலுவ பண்ற அழும்பைத் தாங்க முடியலையே! ஏதோ கற்பாம், கலாசாரமாம், கொம்பாம் - போட்டு அடிச்சுக்கறாய்ங்க. நம்ம பேரு கெட்டுப்போனதுதான் மிச்சம். நீ சூதானமா இருந்துக்க கண்ணு. எதுக்கும் மரத்த விட்டுக் கொஞ்ச நாளைக்கு எங்கயும் எறங்கிப் போயித் திரியாம இரு. அப்றம் யாராச்சும் தொடப்பக் கட்டை, செருப்புன்னு எடுத்துக்கிட்டு வந்து ஒம்மேல பாஞ்சுரப் போறாய்ங்க."


"ஹூம். அடுத்த சென்மத்துலயாவது ஒரு மனுஷியாப் பொறக்கணும்னு நெனச்சேன். வேணவே வேணாம் சாமீ. நா இப்படியே பொறந்துட்டுப் போறேன்"

***
படம் எடுத்தது கொடைக்கானலின் கோக்கர்ஸ் வாக்-கில். ஜேவிஸி ஹேண்டிகாமில் ஸ்டில் படமும் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் 0.7 MP அளவுக்குத்தான் படத்தின் அடர்வு இருப்பதால் ரொம்பச் சுமாராகத்தான் படம் இருக்கும். சும்மா ஜாலிக்கு இங்கே போட்டேன்.

7 comments:

Anonymous said...

;-)))

முகமூடி said...

மேலே சிரிச்சது நாந்தான்.. பேர போடுற்துகுள்ள..

;-)))

துளசி கோபால் said...

சிரிக்கிறேன் சிரிக்கிறேன் சிரிச்சுக்கிட்டே இருக்குறேன்.

என்றும் அன்புடன்,
துளசி

G.Ragavan said...

எனக்கு சிரிச்சிச் சிரிச்சி வயித்து வலி. ரெண்டு ஜெலுசில் மாத்திரைகளை பெங்களூருக்கு அனுப்பி வையுங்க.

அ. பசுபதி said...

கோகர்ஸ் வாக்'கில் நான் காணாத காட்சி. கருத்து, புதுமை.

கொடைக்கானல் said...

"கருத்துப் படம் கருத்தாழம் மிக்கது- புரட்சிகரமானது கூட. பாராட்டுக்கள்.
மனிதர்களின் மாறுபட்ட நிலை மனிதனுக்கு மட்டுமல்ல, விலங்குகளுக்குக் கூட சலிப்பைத்தான் ஊட்டும்.

"வற்றாயிருப்பு" சுந்தர் said...

பின்னூட்டங்களுக்கு நன்றி நண்பர்களே!

கலாசாரம் மிகைப்படுத்தப்பட்டு ஒரு வியாதி போல நம்மைப் பீடித்திருக்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது. நாகரீகத்தின் உச்சத்தில் இருந்த நாடு இப்போது நாகரீகத்திற்கும் கலாசாரத்திற்கும் இடையே சிக்கிக்கொண்டு ஆப்பைப் பிடுங்கிய குரங்கு நிலையில் இருக்கிறதோ என்றும் தோன்றுகிறது. காலச்சுழற்சி என்பதைத் தவிர வேறு எதையும் சிந்திக்கத் தோன்றவில்லை. :(